Wednesday, February 25, 2015

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.

இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். மேலும் வாஸ்து மற்று ம் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ் களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமை யாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்து ள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்…
1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.
2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.
5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.
6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.
7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.
8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.
11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்
12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.
13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.
14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

வீட்டில் சமையலறை அமைக்கும் முறை...


உணவு, இருப்பிடம், உடை இம்முன்றும் மனித வாழ்கையின் அடிப்படை தேவைகள் ஆகும். அவற்றில் மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது உணவு. 
நாம் உண்ணும் உணவே நம் உடலில் மருந்தாக செயல்படுகின்றது. எனவே ஆரோகியமான உணவு உண்பது அவசியமானது. அதனால் ஒரு வீட்டில் சமையலறை அமைக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.
ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும்.


வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை!


பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.
ஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும்.
பூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும்.
பூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.

வாஸ்து: கழிவறை அமைக்கும் முறை

ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும்.


வாஸ்து, கழிவறை, கழிவு, வடமேற்கு, Closet, வடக்கு, தெற்கு, மேல்மாடி
கழிவறை அமைக்கும் முறை:-
* ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும்
* கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும்  
* கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது
* மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது.

வீட்டில் படுக்கையறை அமைக்கும் முறை...


உழைத்திடு, அமைதியாய் உறங்கிடு என்பதற்கேற்ப, மனிதர் ஒவ்வொருவருக்கும் அமைதியான உறக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.
ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் - மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். 
வீட்டில் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.
* ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.
* குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.
* படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.
* மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.
* படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

வாஸ்து: ஜன்னல் அமைக்கும் முறை


ஓவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்குத் தூய்மையான காற்றும் சூரிய ஒளியும் மிக முக்கிய பங்கு ஆற்றுவது போல், ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் நபர்கள் வாழ்வில் சிறந்து விளங்க அந்த வீட்டிற்கு / கட்டடத்திற்குக் காற்றும் சூரிய ஒளியும் நன்கு உள்ளே வர வேண்டும். அப்படி வரவே நாம் ஜன்னல்கள் அமைக்கின்றோம்.

இவற்றை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
* ஒரு வீட்டில் / கட்டடத்தில் அமைக்கப்படும் ஜன்னல்கள் (Windows) உச்சத்தில் தான் அமைக்க வேண்டும்
* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குக் கிழக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்
* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு வடக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்  


* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குத் தெற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்
* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு மேற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்
* வடகிழக்கு பகுதியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள ஜன்னல், 24 x 7 திறந்தே இருக்க வேண்டும்.

வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?

இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.
 
ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் .
 
இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும்.
 
குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும்.
 
இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது.
 
மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது.
 

No comments:

Post a Comment