Wednesday, February 25, 2015

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.

இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். மேலும் வாஸ்து மற்று ம் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ் களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமை யாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்து ள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்…
1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.
2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.
5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.
6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.
7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.
8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.
11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்
12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.
13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.
14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

வீட்டில் சமையலறை அமைக்கும் முறை...


உணவு, இருப்பிடம், உடை இம்முன்றும் மனித வாழ்கையின் அடிப்படை தேவைகள் ஆகும். அவற்றில் மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது உணவு. 
நாம் உண்ணும் உணவே நம் உடலில் மருந்தாக செயல்படுகின்றது. எனவே ஆரோகியமான உணவு உண்பது அவசியமானது. அதனால் ஒரு வீட்டில் சமையலறை அமைக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.
ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும்.


வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை!


பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.
ஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும்.
பூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும்.
பூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.

வாஸ்து: கழிவறை அமைக்கும் முறை

ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும்.


வாஸ்து, கழிவறை, கழிவு, வடமேற்கு, Closet, வடக்கு, தெற்கு, மேல்மாடி
கழிவறை அமைக்கும் முறை:-
* ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும்
* கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும்  
* கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது
* மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது.

வீட்டில் படுக்கையறை அமைக்கும் முறை...


உழைத்திடு, அமைதியாய் உறங்கிடு என்பதற்கேற்ப, மனிதர் ஒவ்வொருவருக்கும் அமைதியான உறக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.
ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் - மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். 
வீட்டில் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.
* ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.
* குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.
* படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.
* மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.
* படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

வாஸ்து: ஜன்னல் அமைக்கும் முறை


ஓவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்குத் தூய்மையான காற்றும் சூரிய ஒளியும் மிக முக்கிய பங்கு ஆற்றுவது போல், ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் நபர்கள் வாழ்வில் சிறந்து விளங்க அந்த வீட்டிற்கு / கட்டடத்திற்குக் காற்றும் சூரிய ஒளியும் நன்கு உள்ளே வர வேண்டும். அப்படி வரவே நாம் ஜன்னல்கள் அமைக்கின்றோம்.

இவற்றை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
* ஒரு வீட்டில் / கட்டடத்தில் அமைக்கப்படும் ஜன்னல்கள் (Windows) உச்சத்தில் தான் அமைக்க வேண்டும்
* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குக் கிழக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்
* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு வடக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்  


* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குத் தெற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்
* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு மேற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்
* வடகிழக்கு பகுதியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள ஜன்னல், 24 x 7 திறந்தே இருக்க வேண்டும்.

வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?

இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.
 
ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் .
 
இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும்.
 
குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும்.
 
இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது.
 
மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது.
 

குழி கணக்கு சாஸ்திரம்

மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்)

                                                                  



குழி கணக்கு சாஸ்திரம்  :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய  பொருத்தங்கள்   வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும்.  முக்கியமாக  கட்டிடத்திற்கு  அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
            குழி என்பது 3 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட 9 சதுரஅடிக் கொண்டது ஒரு குழி எனப்படும்.

உதாரணம் :-   இடத்தின் அகலம் 27 அடி, நீளம் 39 அடி என்றால் 
                                 27 * 39
                                     9               = 117  குழிகள் 
பொருத்தங்கள் மொத்தம் 11 அவைகள் 

  1. கருப்பம்
  2. வரவு 
  3. செலவு 
  4. யோனி 
  5. வயது 
  6. இராசி 
  7. இனம்
  8. அங்கிசம் 
  9. நட்சத்திரம் 
  10. திதி
  11. வாரம் 
[வகுக்கபடும் போது மீதி வர வில்லை என்றால் வகுக்கபடும் எண்ணை மீதி எண்ணாக கொள்ள வேண்டும்]
  1. 1. கருப்பம்  :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும்.மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும்.
சிறப்பான எண் - 1, 2, 3, 5, 7.

உதாரணம் :-  அகலம் 27 அடி,  நீளம் 39 அடி 

                               27 * 39
                                     9               = 117  குழிகள் 
மொத்த குழிகள் 117 ஐ   8 ல் வகுக்க வருவது 14 ம் மீதி 5 தும் இந்த 5 கற்ப எண் எனப்படும். இந்த 5 சிறப்பான எண்  (சிறப்பு 1,2,3,5,7)ஆகவே  கருப்பம்  பொருத்தம் உண்டு  என்றுக் கொள்ள வேண்டும் 
2.  வரவு பலன்  :-  மொத்தக் குழியை 8 ல் பெருக்கி பெருக்குத் தொகையை 12 ல் வகுக்க வந்த மீதி வரவு எனப்படும். மீதி இல்லையானால் மீதி 12 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும் 
அனைத்து எண்களும் சிறப்பானவைகளே   ஆனால் இதில் பார்க்க வேண்டியது அடுத்து வரக்கூடிய செலவு எண்ணை விட இந்த எண் அதிகமாக வரவேண்டும்.
3. செலவு பலன் :- மொத்த குழியை  9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 10 ல் வகுக்க வரும் மீதி எண் செலவு எண் எனப்படும். மீதி இல்லையென்றால் மீதி 10 செலவு எண்ணாக  கொள்ள வேண்டும் 
சிறப்பான எண்கள் - 3, 4, 6, 8, 10.
4. யோனி  பலன் :-  மொத்தக் குழியை 3 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 8 ல் வகுக்க வரும் மீதி யோனி எண் மீதி வரவில்லையானால் மீதி 8 ஆக கொள்ள வேண்டும்.
சிறப்பு எண்கள் - 1, 3, 5, 7.
5. வயது பலன் :-  மொத்தக் குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும் மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும்.
வயது எண்  45 க்கு மேல் வருவது நல்லது வயது எண் அதிகமாக, அதிகமாக சிறப்பானது 

6. இராசி பலன் :-  மொத்த குழியை  4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12.

7. இனம் பலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது இன எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3.

8. அங்கிச பலன்கள் :-  மொத்தக் குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் மீதி அங்கிசம் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 3, 4, 5, 6, 8, 9.

9. நட்சத்திர பலன் :-  மொத்தக்  குழியினை 8 ல் பெருக்கி, பெருக்குத் தொகையினை 27 ல் வகுக்க மீதி வரும் எண் நட்சத்திர எண் ஆகும் .
சிறப்பான எண் - 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26.
10.  திதி பலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 30 ல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30

11.  வார  பலன்கள் :- மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க  வரும் மீதி நாள் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 4, 5, 6.

                                    *******************************

மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ செங்கல் வைத்து திட்டு கட்டி அந்த அடியை சரி செய்து கொள்ள வேண்டும்

வீட்டின் உள் அளவு   நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :- 

  6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 -  30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 -  52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100.

வீடு கட்டுவதற்குறிய மனையடி சாஸ்திரப் பலன்!

மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும்.
6- அடி நன்மை,  7- அடி தரித்திரம், 8- அடி நல்ல பாக்கியம் தரும், 9- அடி கெடுதல் தரும், 10- அடி ஆடுமாடு சுபிட்சம், 11- அடி பால்பாக்கியம், 12- அடி விரோதம், செல்வம் குறையும், 13- அடி ஆரோக்கியம்குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி ராஜயோகம், 21- அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும், 22- அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி 23- அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான், 24- அடி வயது குன்றும், மத்திம பலன், 25- அடி தெய்வ கடாக்ஷமில்லை, 26- அடி இந்திரனைப் போல் வாழ்வார், 27- அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார், 28- அடி செல்வம் சேரும், 29- அடி பால்பாக்கியம், செல்வம் தரும், 30- அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார், 31- அடி சிவ கடாக்ஷத்துடன் நன்மை பெருகும், 32- அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார், 33- அடி நன்மை, 34- அடி விட்டோட்டும், 35- அடி தெய்வகடாக்ஷமுண்டு, 36- அடி அரசரோடு அரசாள்வார், 37- அடி இன்பமும் லாபமும் தரும், 38- அடி பேய் பிசாசு குடியிருக்கும், 39- அடி இன்பம் சுகம் தரும், 40- அடி என்றும் சலிப்புண்டாகும், 41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும், 42- அடி லக்ஷ்மி குடியிருப்பாள், 43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும், 44- அடி கண் போகும், 45- அடி துர்புத்திரர் உண்டு, 46- அடி வீடு ஓட்டும், 47- அடி எந்நாளும் வறுமை தரும், 48- அடி வீடு தீப்படும், 49- அடி மூதேவி வாசம், 50- அடி பால்பாக்கியம் ஏற்படும், 51- அடி வியாஜ்யம், 52- அடி தான்யமுண்டு, 53- அடி வீண்செலவு, 54- அடி லாபம் தரும், 55- அடி உறவினர் விரோதம், 56- அடி புத்திரர் உற்பத்தி, 57- அடி புத்திர அற்பம், 58- அடி விரோதம், 59- அடி சுபதரிசனம், 60- அடி பொருள் விருத்தி உண்டு, 61- அடி விரோதமுண்டு 62- அடி வறுமை தரும், 63- அடி இருப்பு குலையும், 64- அடி நல்ல சம்பத்து தரும், 65- அடி பெண் நாசம், 66- அடி புத்திரபாக்கியம், 67- அடி பயம், 68- அடி திரவிய லாபம், 69- அடி அக்னி உபாதை, 70- அடி அன்னியருக்கு பலன் தரும், 71- அடி இராசியுப்பிரியம், 72- அடி வெகுபாக்கியம், 73- அடி குதிரை கட்டி வாழ்வான், 74- அடி பிரபல விருத்தி, 75- அடி சுகம், 76- அடி புத்திர அற்பம், 77- அடி யானை கட்டி வாழ்வான், 78- அடி புத்திர அற்பம், 79- அடி கன்று காலி விருத்தி, 80- அடி லக்ஷ்மிவாசம், 81- அடி இடி விழும், 82- அடி தோஷம் செய்யும், 83- அடி மரண பயம், 84- அடி சௌக்கிய பலன், 85- அடி சீமானாவான் 86- அடி இம்சை உண்டு, 87- அடி தண்டிகை உண்டு, 88- அடி சௌக்கியம், 89- அடி பலவீடுகள் கட்டுவான், 90- அடி யோகம், பாக்கியம் தரும், 91- அடி வித்துவாம்சமுண்டு, 92- அடி ஐஸ்வரியம், 93- அடி தேசாந்திரம் வாழ்வான், 94- அடி அன்னிய தேசம் போவான், 95- அடி தனவந்தன், 96- அடி பிறதேசம் செல்வான், 97- அடி கப்பல் வியாபாரம், விலை மதிப்புள்ள வியாபாரம் போவான், 98- அடி பிறதேசங்கள் போவான், 99- அடி இராஜ்ஜியம் ஆள்வான், 100- அடி ÷க்ஷமத்துடன் சுகத்துடன் வாழ்வான்.
அவரவர்கள் ஜனித்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திக்குகள் விவரம்
ரிஷபம். மிதுனம், கடக ராசியில் ஜெனனமானவர்கள் வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்
வீடு கட்ட வேண்டிய மாதங்கள் விவரம்:
வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, உத்தமம்.




FEET EFFECTS/CONSEQUENCES
6 The resident will lead a peaceful life.
7 The resident will lose all his wealth.
8 The resident will be blessed with great wealth and will enjoy all pleasures.
9 The resident will not only lose all his wealth but will also face insurmountable difficulties.
10 The resident can be assured of atleast a square meal a day.
11 The resident will enjoy overall health and wealth.
12
The resident will lose his child.
13
The resident will suffer from incurable diseases.
14
Peace of mind will be lost.
15
A death will occur in the resident's family.
16
The resident will attain great wealth.
17
The resident will defeat his enemies.
18
The house will get destroyed soon.
19
The resident will experience poverty.
20
The resident will lead a happy life.
21
The resident will live with honour and dignity.
22
The resident will defeat his enemies.
23
All evil events will occur in the house.
24
Only moderate benefits can be expected.
25
The resident will lose his wife.
26
Prosperity will rule the house .
27
The resident will become rich.
28
God will bless  the resident and his family.
29
The resident will be blessed with all kinds of wealth and material possessions.
30
The resident will be blessed by Godess Lakshmi, the God of wealth.
31
The resident will experience moderate benefits
32
Lost wealth will be regained.
33
The resident will be blessed with overall prosperity
34
The resident will be forced to vacate the house and  live elsewhere.
35
The resident will make a fortune.
36
The resident will be courageous.
37
The resident will be blessed with good children and wealth.
38
The resident will be haunted by a demon at all times.
39
The resident will be blessed with overall prosperity.
40
The resident will lose his possessions because of his enemies.
41
The resident will experience some happy events in his family.
42
The resident wil be blessed with all kinds of wealth.
43
The resident will experience difficulties.
44
The resident will become blind.
45
The resident will be blessed with good children.
46
The resident will lose his prosperity.
47
The resident will lose his prosperity and will reside in an evil place.
48
The resident will face danger from fire.
49
The resident will face poverty.
50
The resident will face neither good nor bad times.
51
The resident will have to face unnecessary disputes.
52
The resident will be blesed with good food all his life.
53
The resident will face problems because of women.
54
The resident will incur the wrath of the government.
55
Help from relatives can be expected.
56
The resident will be blessed with children.
57
The resident will not have children.
58
The resident will face a threat to his life.
59
The resident will face financial troubles.
60
The resident will advance in his chosen career.
61
The resident will face unwanted disputes.
62
The resident will face poverty and suffer from diseases.
63
The resident will win in disputes.
64
The resident will prosper and will enjoy all luxuries.
65
The resident will lose his wife.
66
The resident will be blessed with overall prosperity.
67
A devil will enter the house.
68
The resident will unearth a treasure.
69
The resident will face danger from thieves.
70
The resident will become famous.
71
The resident will ascend to higher positions in the government.
72
The resident wil prosper and gain knowledge.
73
The resident wil have no children.
74
The resident will receive support from the government.
75
The resident will lose his wealth and may die.
76
The resident will face trouble from his relatives.
77
The resident will buy a new vehicle.
78
The resident's daughter will face problems.
79
The resident will be blesed with wealth.
80
The lord of wealth will reside in that house.
81
There is a threat to the owner of the house.
82
Threat from natural calamities.
83
The resident will lose his peace of mind.
84
The resident will live happily.
85
The resident will enjoy all luxuries.
86
The resident will face financial difficulties.
87
The resident will acquire vehicles.
88
The resident will experience overall welfare.
89
The resident wil build and acquire more houses.
90
The resident will prosper in all aspects of life.
91
The resident will be very knowledgeable.
92
The resident will become famous ,might win awards and privileges.
93
The resident will be forced to shift his residence.
94
Poverty will rule the house.
95
The resident will become a celebrity.
96
There will be a drastic increase in all expenditures.
97
The resident will prosper in international business.
98
The resident will go abroad  and become famous.
99
The resident will be blessed with great fortune.
100
The god of arts and education will reside in that house.
101
The resident will accumulate huge wealth.
102
The resident will get help from friends.
103
The resident will be convicted.
104
The resident will not make profits from his business.
105
The resident's daughter will suffer from disease.
106
The resident will make a fortune.
107
The resident will acumulate huge wealth.
108
God wil bless that house and the house and its residents.
109
The resident will be blessed with overall prosperity.
110
The God of wealth will bless the house and its residence.
111
Happy events will occur in the family.
112
The resident will regain lost property.
113
The resident will accumulate wealth.
114
There will be a change of place in the near future. 
115
The God of wealth will bless the house.
116
The resident will be well respected in the society.
117
The resident will become wealthier in general.
118
Poverty will rule that house.
119
The resident will accumulate huge wealth.
120
The resident will lose his entire wealth.